காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாகபோராட்டம்


காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 9வது நாளாக தொடர்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கடந்த 8ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 9வது நாளாக தொடர்கின்றது.

 

வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள் இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி எமக்கு எதுவும் தெரியாது என்று இந்த அரசாங்கம் கூறலாம், எமக்கு தெரியும் இவர்களை இந்த அரசுதான் வைத்திருக்கின்றது என்று ஆனால் இறுதிப்போரில் வட்டுவாகலிலும் ஒமந்தையிலும் வைத்து விசாரணை என்ற பெயரில் இராணுவத்திடம் நாம் ஒப்படைத்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று இந்த அரசு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். அவர்களை நாம் பத்திரமாக இந்த அரச இராணுவத்திடம் ஒப்படைத்தோம் ஆனால் இன்றோ அவர்களை தொலைத்தவர்களாய் தேடி அலைகின்றோம். இவ்வாறு தனது பிள்ளை இராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு தேடியலையும் தாய் ஒருவர் இன்று 9வது நாளாக முல்லைத்தீவில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் கண்ணீர் மல்க கதறி அழுதார்.

 

எங்களுக்கு எமது பிள்ளைகளை தாருங்கள்… அவர்கள் இருக்கின்றார்களா.? இல்லையா.? என்று தெரியாமல் அவர்களின் நம்மை தீமைகளை கூட செய்ய முடியாதவர்களாய் ஏங்கி தவிக்கின்றோம் ஏதாவது ஒரு பதில் கூறுங்கள்… கொன்று விட்டால் கொன்று விட்டோம் என்று இல்லை இருக்கின்றார்கள் என்றால் இருக்கின்றார்கள் என்று ஏதாவது ஒன்றை கூறுங்கள் என்று கதறி அழுது தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

 

தமக்கு கால தாமதமின்றி தீர்வு வேண்டும் என்றும் இல்லையேல் “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை கொண்டு செல்லப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின்போது முன்வைக்கப்பட்டுள்ளன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *