மேத்யூ’ தாக்கியதில்காலரா நோயால் கடுமையாக அவதி-ஹைதி


கரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ புயல் பகாமாஸ் நாடு வழியாக இந்த மாத தொடக்கத்தில் அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது.

இதனால் ஹைதி, அமெரிக்கா, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது. இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹைதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ‘மேத்யூ’ தாக்கியதில் சின்னாபின்னமான ஹைதி நாட்டு மக்கள், தற்போது காலரா நோயால் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

மேத்யூ புயலுக்கு பின்னர் இதுவரை 800 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மட்டும் 773 பேர் காலரா பாதிப்பு ஏற்பட்டு பதிவு செய்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஹைதி பிரதிநிதி ஜீன் லக் பொன்செலெட் தெரிவித்தார்.

முன்னதாக 10 லட்சம் காலரா தடுப்பு மருந்துகளை கரீபியன் நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *