முகாம்களில் அகதிகளாக வாழும் மக்கள்மீள்குடியேற்றப்படுவர் என்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா வாக்குறுதி


இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள முகாம்களில் அகதிகளாக வாழும் மக்கள் 6 மாதத்தில் அவர்களது சொந்த வாழ்விடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசாங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு வந்திருந்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா, தெல்லிப்பழை அகதி முகாமுக்கு சென்றார். அங்கு தமிழ் மக்களோடு அமர்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டார்.

பின்னர், யாழ்ப்பாணம் மாநகரசபை திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சிறிசேனா, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போடப்பட்டிருந்த பாதுகாப்பை தளர்த்தி உத்தரவிட்டுள்ள பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் குறைகூறி வருவதற்கு கண்டனம் தெரிவித்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *