வங்கதேச முன்னாள் பிரதமர் மகன் சிறை


வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுக்கு, ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

வங்கதேச முன்னாள் பிரதமரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான கலீதா ஜியாவுடைய மகன் தாரிக் ரஹ்மான், 48. இவர் மீது, 16 கோடி ரூபாயை, சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த, தாகா சிறப்பு கோர்ட், அவரை நிரபராதியாக அறிவித்தது. இதை எதிர்த்து, லஞ்ச தடுப்பு ஆணையம் சார்பில், ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

இது தொடர்பாக, நேற்று தீர்ப்பளித்த ஐகோர்ட், தாரிக் ரஹ்மானுக்கு, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 17 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. கடந்த, 2008ல், வங்கதேசத்தை விட்டு தப்பிச் சென்ற தாரிக் ரஹ்மான், தற்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *