எபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் முதல் கட்டத்தை அடைந்தாகி விட்டது-அமெரிக்க விஞ்ஞானிகள்


அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கிய ஒரு மருந்து, எபோலா கிருமியை கொண்ட குரங்குகளை குணமாக்குவது கண்டறியப்பட்டிருக்கிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட காரணமாக இருந்த இந்த நோயிக்கான மருந்து ஒன்றை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள். ” டிகேஎம் – எபோலா- குய்னா ” என்று அழைக்கப்படும் இந்த மருந்தை, எபோலா கிருமிகளை கொண்ட குரங்குகளுக்கு கொடுத்ததில் 28 நாட்களில் குணமாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆனால் அதே நேரம் இந்த மருந்தை கொடுக்காத குரங்குகள் 9 நாட்களில் இறந்து விட்டன. இருந்தாலும் இந்த மருந்தை, இன்னும் மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்யவில்லை. இப்போதைய நிலைமையில் எபோலா நோய்க்கு மருந்தோ தடுப்பு ஊசியோ இல்லை என்பதே உண்மை. இந்த மருந்து குறித்து ” நேச்சர் ” பத்திரிக்கையில் கட்டுரை எழுதியுளள டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி தாமஸ் கெய்ஸ்பர்ட், ” எபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் முதல் கட்டத்தை அடைந்தாகி விட்டது ” என்றும், ” இந்த மருந்து இந்த வருட இறுதிக்குள் மனிதர்களுக்கு கொடுக்கப்படும் ” என்றும் எழுதியுள்ளார். 1976 ம் ஆண்டே எபோலா நோய் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டாலும் இதன் தாக்கம் 2014 ல் தான் அதிகமாக இருந்தது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, கினியா, சியாரா லியோன்,நைஜீரியா, மாலி மற்றும் அமெரிக்கா வில் இந்த நோய் தாக்குதலில் இதுவரை 10,602 பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால் இந்த நோய் 25,556 பேருக்கு இருப்பது இதுவரை தெரிய வந்திருக்கிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *