இங்கிலாந்தில் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை


இங்கிலாந்தில் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்து அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் இங்கிலாந்தின் வேல்ஸ் மற்றும் பார்பரா பகுதிகளில் பலத்த காற்றுவீசும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று பகல் 12 மணிமுதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், இரவில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாலங்களில் செல்லும் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *