வடமாகாண முதலமைச்சர் முல்லைத்தீவு போராட்டத்தில் பங்கேற்பு


முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில், அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது இன்று சுதந்திரதினத்திலும் கறுப்புக்கொடி பறக்கவிடப்பட்டு 5 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

முதலமைச்சரின் குறித்த விஜயத்தின் போது வட மாகாண சபை விவசாயத் துறை அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாண சபை உறுப்பினர் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்,சிவநேசன் மற்றும் ரவிகரன் உள்ளிட்டவர்களும் சென்றுள்ளனர்.

மேலும் புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்புலவில் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக முள்ளியவளை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் ஆகியநகரங்களில் அமைந்துள்ள கடைகள் அனைத்து மூடப்பட்டு, இன்றையதினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருவதால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *