பாகிஸ்தானை சேர்ந்த பெண்கள் 100 பேர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில்


ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு மக்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர். வெளிநாடுகளை சேர்ந்த பெண்களை தங்களது இயக்கத்தில் சேர்த்துகொள்ளும் இந்த கும்பல், அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து, செக்ஸ் அடிமைகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து சுமார் ஆயிரம் ஆண்-பெண்கள் தங்களது நாடுகளைவிட்டு வெளியேறி, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டையிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100 பேர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரும் நோக்கத்தில் ஈராக் மற்றும் சிரியாவுக்கு தப்பியோடியுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்ட மந்திரி ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அங்கு இயங்கிவந்த சில குழுவைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் தலைமை தரகராக செயல்பட்டுவந்த அமீர் மன்சூர் என்பவரையும் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாகவும் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராணா சனாவுல்லா கூறியுள்ளார்.One thought on “பாகிஸ்தானை சேர்ந்த பெண்கள் 100 பேர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில்

  1. That some men fall for this trap itself is very bad. Then, women falling into this hell is really heart rending. God save them from those monsters!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *