அகதிகள் படகு கடலில் மூழ்கியதில் 40 பேர் பலி-இத்தாலி


இத்தாலி அருகே மேலும் ஒரு அகதிகள் படகு கடலில் மூழ்கியதில் 40 பேர் பலியாகினர்.

லிபியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ஏராளமான மக்கள் வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர். அதற்காக கடத்தல்காரர்களின் படகுகளில் புறப்பட்டு வரும் போது மத்திய தரைக்கடலில் மூழ்கி பலியாகி வருகின்றனர்.

அவர்களை இத்தாலி அரசு மீட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் இத்தாலி கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் இத்தாலி கடல் பகுதியில் 6 ஆயிரம் பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 10 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இருந்தும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்த அகதிகள் ரப்பர் படகு இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் மூழ்கியது. அதில் 137 பேர் பயணம் செய்தனர். படகு மூழ்கிய தகவல் அறிந்ததும் இத்தாலி கடற்படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

அதற்குள் 40 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். அவர்களில் பெரும் பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இவர்கள் தவிர மற்றவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *