யூரோ போட்டிக்காக பிரான்ஸ் 90 அயிரம் பாதுகாப்பு அதிகாரிகளை குவிப்பு


உலகக் கோப்பைக்கு நிகராக கருதப்படுவது யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த தொடரில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் கலந்து கொள்ளும். இந்த தொடர் வருகிற 11-ந்தேதி முதல் அடுத்த மாதம் 11-ந்தேதி வரை சுமார் 31 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை காண ஐரோப்பிய கண்டத்தில் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் பிரான்ஸ் செல்வார்கள்.

இந்த வாய்ப்பை பயன்டுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து தங்களது நாட்டு ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதனால் போட்டி நடக்க இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் பிரான்ஸ் உச்சக்கட்ட பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கென ‘ஸ்மார்ட் போன் அப்’ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை ரசிகர்கள் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கிற மாதிரி அறிகுறி ஏற்பட்டால் இந்த ‘அப்’ மூலம் தகவல் அனுப்பலாம். உடனடியாக நடிவடிக்கை எடுக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அலுவலகம் ‘யூரோ’ தொடர் நடக்கும்போது மைதானம், ரசிகர்கள் பகுதி, போட்டியை ஒளிப்பரப்பக்கூடிய மீடியாக்கள் பகுதி மற்றும் போட்டி சார்ந்த இடங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதுபோல் அமெரிக்காவும் கடந்த வாரம், ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது. இதற்கிடையே உக்ரைனில் கடந்த திங்கட்கிழமை ஆயுதங்களுடன் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

யூரோ போட்டிக்காக பிரான்ஸ் 90 அயிரம் பாதுகாப்பு அதிகாரிகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *