மடு தேவாலயம் இலங்கையின் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அனுமதி!


 

மன்னாரில் உள்ள மடு தேவாலயம் உள்ளிட்ட பகுதியை இலங்கையின் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மடுதேவாலயம் கிறிஸ்தவ பக்தர்களின் புனித யாத்திரைக்கும் போன்றே ஏனைய மதத்தவர்களின் கௌரவத்தை பெற்றுள்ள வரலாற்று சிறப்பு மிக்க புனித வழிபாட்டு பூமியாகும்.

இந்த மத வழிபாட்டு தளத்தை பாதுகாப்பதற்கும் அங்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதும் காலத்தின் தேவையாக கருதி மடு தேவாலயம் உள்ளிட்ட பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

இந்த பிரதேசத்துக்கு அருகாமையில் போக்குவரத்து மற்றும் வீதி வசதி நீர்ப்பாசன கட்டமைப்பு மற்றும் இயற்கை கழிவறை வசதி ஆகியவற்றை மேற்படுத்துவதற்கும் இந்தப் பிரதேசத்திற்கு வெளியிடங்களிலிருந்து வரும் பொதுமக்களுக்கு தங்குமிடம், ஓய்வு விடுதி வசதிகளை வழங்குவதுடன் மடு தேவாலய பூமி பகுதியில் விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *