ஆட்சி மாறினால் சிறை செல்ல நேரிடும் என்று ரணிலுக்குப் பயம்; மஹிந்த


ஆட்சி மாற்றம் ஏற்­பட்டால் தான் சிறைக்கு ­செல்ல நேரிடும் என்­பதை அறிந்தே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக பல சட்ட சிக்கல்களை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று (வெள்­ளிக்­கி­ழமை) இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் இவ்வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், “ஐக்­கிய தேசிய கட்­சியின் முழு ஒத்துழைப்புடனே மத்திய வங்கி பிணைமுறி இடம்பெற்றது. அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானோர் இந்த மோசடியுடன் தொடர்புடையவர்கள்.

அவர்­களே இன்று ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு ஆத­ர­வாக அணி­தி­ரண்­டுள்­ளனர். பிணை­முறி மோசடி விவ­காரம் குறித்து ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச இது­வ­ரையில் எவ்­வித கருத்­துக்­க­ளையும் தெரி­விக்­க­வில்லை. அவ்­வாறு தெரி­வித்தால் கட்­சியின் ஆத­ரவு கிடைக்­காது.

எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சி தோற்றம் பெற்றால் மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் நாட்­டுக்கு அழைத்து வரப்­ப­டுவார். அதன் பின்னர் தான் சிறைக்கு ­செல்ல நேரிடும் என்­பதை அறிந்தே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக பல சட்ட சிக்கல்களை ஏற்படுத்துகிறார்” என மேலும் தெரிவித்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *