மாளிகாவத்தையில் நடந்த அனர்த்தம் – மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில்!


நாட்டில் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த கடுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சந்தர்ப்பத்தில் மக்கள் நெரிசலில் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல், ஊரடங்கு சட்டத்தை செயற்படுத்தும் சந்தர்ப்பத்தில் அனைவரும் ஆதரவுடன் செயற்பட வேண்டும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஆதரவு அத்தியாவசியம் என தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிதி பகிர்வின் போது ஏற்பட்ட நெரிசலில் 3 பெண்கள் உயிரிழந்தனர். இது தொடர்பில் கருத்து வெளியிடும் போது வைத்தியர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தினால் காயமடைந்த மேலும் 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 5 பேர் வீடு திரும்பியுள்ளனர். எனினும் நால்வரின் நிலை ஆபத்தாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

மக்கள் ஒன்று கூடுதல் மற்றும் அவ்வாறான இடங்களுக்கு செல்வதனை இந்த சந்தர்ப்பத்தில் ஒரு போதும் மேற்கொள்ள கூடாத செயல் என விசேட வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை தொடர்ந்து செயற்படுத்துவதனால் அதற்கிணங்கி செயற்படுதல் அவசியமாகும் என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *