கனவு நனவாவதற்கு முன் விபத்தில் உயிரிழந்த விண்வெளி வீரர்!


தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 30 வயது மண்டலா மசெக்கோ (Mandla Maseko) என்பவர் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் ஆபிரிக்கர் என்ற பெருமையைப் பெறவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

அவரது அந்த விருப்பம் நிறைவேறுவதற்குள் மோட்டார் சைக்கிள் விபத்தில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மசெக்கோ கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க வான் படையைச் சேர்ந்த அவர், கடந்த 2013 ஆம் ஆண்டில் 10 லட்சம் பேருடன் போட்டியிட்டு, அமெரிக்காவின் விண்வெளிக் கழகத்தில் இடம்பிடித்தார்.

23 பேருக்கு மட்டுமே அந்தக் கழகத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மசெக்கோவின் வெற்றி மகத்தானதாகக் கருதப்பட்டது.

2015 இல் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் ஒரு வாரச் விண்வௌி சோதனைகள் மற்றும் புவியீர்ப்பு எதிர்ப்பு பயிற்சிகளில் பங்கேற்றார்.

நன்றி-krishanLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *