போராட்டத்தை கைவிடுங்கள் – மங்கள சமரவீர 


 

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் உதவியை நாடுமாறும், காணாமல் போனோரின் உறவுகளை நிதியமைச்சர் மங்கள சமரவீர கோரியுள்ளார். வடக்கிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் முல்லைத்தீவில்  காணாமல் போனோரின் உறவுகளை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இதற்கு முன்னர் அரசாங்கத்தினால் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், அமைச்சரின் கோரிக்கையை காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் நிராகரித்ததுடன், தம்மை வந்து சந்தித்தமைக்கு நன்றி பாராட்டினர்.

வரவுசெலவுத் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்களுக்காக வடக்கு மாகாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர், வடக்கில் அவரது செயற்பாடுகள் அனைத்தையும் டுவிட்டர் உடனுக்குடன் பதிவிட்டு வந்த நிலையில், காணாமல் போனோரது உறவுகளுடனான சந்திப்பை மாத்திரம் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *