மன்னாரில் 13 ஆம் நூற்றாண்டுக்குரிய விநாயகர் சிலை!


மன்னார் குருந்தன்குளம் குளத்திற்கு அருகில் உள்ள விநாயகர் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பண்டைய காலத்து விநாயகர் சிலை மற்றும் எச்சங்கள் கிடைத்துள்ளதாக யாழ். தொல் பொருள் திணைக்கள அலுவலகம் தெரிவித்துள்ளது.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்த விநாயகர் சிலையை ஆய்வு செய்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் பீ. புஷ்பரத்ன, அந்த சிலை 13 ஆம் நூற்றாண்டு வரையான வரலாற்றை கொண்டது எனக் கூறியுள்ளார்.

விநாயகர் சிலை மற்றும் எச்சங்கள் தொடர்பாக சரியான கால நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும் தொடர்ந்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் யாழ்ப்பாண தொல் பொருள் திணைக்கள அலுவலகம் தெரிவித்துள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *