மோர்டாஸாவின் ஓய்வில் தீடிர் மாற்றம்!


பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் மஷ்ரஃபி மோர்டாஸா, தனது ஓய்வு முடிவில் இருந்து தற்போது பின்வாங்கியுள்ள நிலையில், இதுகுறித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

நடப்பு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரொடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் மஷ்ரஃபி மோர்டாஸா, அறிவித்திருந்தார். இந்நிலையில், அவர் தனது ஓய்வு முடிவில் இருந்து தற்போது பின்வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், ஓய்வு பெறுவது குறித்து ஒரு தனிப்பட்ட வீரர் தான் தீர்மானிக்க வேண்டும் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘மஷ்ரஃபி மோர்டாஸா பங்களாதேஷ் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அவரை நான் போராளி என்று தான் அழைப்பேன். ஏனென்றால் ஒவ்வொரு போட்டியின்போதும் தனது அணிக்கா போராட தயாராவார். இதனால் சக அணி வீரர்களும் ஈர்க்கப்பட்டனர். ஒட்டுமொத்த அணியின் மரியாதையையும் பெற்றவர்.

இதுதான் அவரின் இறுதி உலகக்கிண்ண தொடர், இதனால் அவருக்கு இது கடினமான காலகட்டம். ஒவ்வொரு கிரிக்கெட் அணியைப் போன்று பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும் அடுத்தகட்டத்துக்கு பயணிக்க வேண்டியுள்ளது.

ஓய்வு பெறுவது குறித்து ஒரு தனிப்பட்ட வீரர் தான் தீர்மானிக்க வேண்டும். அதில் எந்த நிர்பந்தமும், அழுத்தமும் ஏற்படக் கூடாது. எனவே கிரிக்கெட் சபையுடன் பேசி மஷ்ரஃபி தான் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஏற்கனவே பல விமர்சனங்களை சந்தித்துள்ளதால் அவருடைய இந்த முடிவு அணியை எந்த வகையிலும் பாதிக்காது’ என கூறினார்.

நடப்பு உலகக் கிண்ண தொடரில் பங்களாதேஷ் அணியை வழிநடத்தும் மஷ்ரஃபி மோர்டாஸா, அந்த அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்தாலும், இதுவரை ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

35 வயதான மஷ்ரஃபி மோர்டாஸா, இதுவரை 216 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி – AnojkiyanLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *