வடக்கின் இரு துருவங்கள் மோதல் – வடக்கின் கில்லாடி யார்?


அரியாலை சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்த‌ப்பட்டு வருகின்ற  வடக்கின் கில்லாடி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டம்  நேற்றைய தினம் இரவு 7.00 மணியளவில் அரியாலை பயிற்சித் திடல் மைதானத்தில் ஆரம்பமானது.

ஆட்டத்தில் கிஷாந்த் தலைமையிலான கிளிநொச்சி உருத்திபுரம் அணியை எதிர்த்து ஞானரூபன் தலைமையிலான இளவாலை யங்கென்றீஸ் அணி மோதியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா இரு கோலை பெற்றமையால் வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு முறையில் 3:2 என்ற கோல் கணக்கில் யங்கென்றீஸ் அணி வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்குள் கால் பதித்தது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *