“நான் யாழ்ப்பாணத்து பொண்ணு” | மதுமிலா


தனது அமைதியான நடிப்பால் சின்னத்திரையில் தனக்கென ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர்

மதுமிலா. இவரது சொந்த பெயரைவிட “ஆபிஸ்’ சீரியல் லட்சுமி  என்றால் சட்டென்று அடையாளம் தெரியும்… தற்போது “கிச்சன் சூப்பர் ஸ்டார் சீசன் 4′ நிகழ்ச்சித்  தொகுப்பாளினியாக இருக்கிறார்.

இவரைப் பற்றி.

நடிக்க வந்த கதை என்ன?

 நான் யாழ்ப்பாணத்து பொண்ணு. பெற்றோரின் வேலை நிமித்தமாக என்னுடைய சிறுவயதிலேயே சென்னைக்கு  வந்து செட்டிலாகிவிட்டோம். சிறு வயதிலிருந்தே எனக்கு கதைகள், நாவல்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். அப்படி ஒரு முறை “பொன்னியின் செல்வன்’ கதையைப் படித்தேன். அதிலிருந்து எனக்கு திரைத்துறையில் நடிகையாக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

 இந்த ஆர்வத்தினால் படித்துக் கொண்டே மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக  சின்னத்திரையில் பயணத்தை தொடங்கினேன்.  அதையடுத்து  விஜய் டிவியில் தர்மயுத்தம் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிகையானேன்.  இதைத் தொடர்ந்து மேலும் சில சீரியல்களில் நடித்திருந்தாலும் “ஆபீஸ்’ தொடர்தான் எனக்கு பெரிய ரீச் கொடுத்தது.

 பொதுவாக சின்னத்திரை நடிகைகளைக் கேட்டால் சினிமாவில் நடிக்க ஆசையில்லை என்பார்கள். ஆனால்  எனக்கு சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பதுதான் லட்சியமே..

உங்களது நடிப்பை பார்த்து உங்கள் அம்மா என்ன

சொல்லுவார்?

அம்மாதான் எல்லாமே.

சீரியலில் நான் அணிந்து வரும் உடைகளை பெரும்பாலும் தேர்வு செய்து கொடுப்பது முதல்,  டிரஸ்கோட் டிப்ஸ், நடிப்பைப் பற்றி விமர்சனம் என அம்மாவின் பங்கு அளப்பரியது.

உங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கிறேதே?

மதுமிலா என்றால் இனிமையானவள் என்று அர்த்தம்.

பெரும்பாலும் உங்கள் தொடர்களில் வீட்டுக்கு தெரியாமல்  காதல் கல்யாணம் என  வருகிறதே?  நிஜத்தில் காதல் அனுபவம் உண்டா?

 காதல் எல்லாம் சீரியலோடு சரி. நிஜத்தில் என் பெற்றோர் பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.

 உங்களுக்கு பிடித்தது என்ன?

நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. படிப்பும், நடிப்பும் எனக்கு இரு கண்கள் போன்றது. என்னதான் நடித்து புகழ்பெற்றாலும் கல்விதான் நிரந்தரமானது.

 பெரியதிரையில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது? எப்போது நாயகியாக

போகிறீர்கள்?

 “பூஜை’, “ரோமியோ ஜூலியட்’ “மாப்ள சிங்கம்’ என மூன்று படத்தில் நடித்திருக்கிறேன். மூன்று படமும் மூன்று வித அனுபவங்கள்தான். நாயகியாக வேண்டும் என்ற ஆசையில்தானே இந்தத் துறையையே தேர்ந்தெடுத்தேன், தற்போது கிடைக்கும் நல்ல கதாபாத்திரங்களை உபயோகப்படுத்திக் கொள்கிறேன்.  இதைத் தவிர நாயகியாக நடிக்க ஒரு படத்தில் பேசியிருக்கிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரும்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *