குத்துச்சண்டை வீரர் பலி!


குத்து சண்டை போட்டியில் காயமடைந்த 28 வயதுடைய மக்சிம் தாதாசேவ் மூளையில் ஏற்பபட்ட இரத்தக் கசிவோடு வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கோமா நிலைக்கு சென்ற பின்னர் அவருக்கு மண்டை ஓட்டின் வலது பக்கத்தை அகற்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆனால் சிகிச்சை பயனளிக்கவில்லை.

போட்டியின் போது மக்சிம் தாதாசேவின் தலையில் பல முறை தாக்குதல் இடம்பெற்றுள்ளதால் அவர் மூளையில் இரத்தக்கசிவேற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குத்துச்சண்டை வீரர் நேற்று செவ்வாய்க்கிழமை இறந்துவிட்டதாக அவரது பயிற்சியாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *