“வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு | சென்னை


 

”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு தொடர்பாக மே 17 இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு…

”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டினை பிப்ரவரி 18 அன்று சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்

தமிழீழ விடுதலைப் பயணத்தில் நாம் இப்போது எங்கு நின்று கொண்டிருக்கிறோம், தமிழகம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, இலங்கையின் புதிய அரசியல் சாசனம் சொல்வது என்ன, தமிழீழ விடுதலை எனும் இலக்கினை நோக்கி நகர்ந்திட நாம் எவ்வாறெல்லாம் பயணத்திட வேண்டியிருக்கிறது என அனைத்தையும் குறித்த விரிவான விளக்க உரையாடல்கள் நடைபெறும்.

மலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வரான திரு.ராமசாமி அவர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

தமிழீழத்திலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளார்கள். இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழீழ ஆதரவு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

திரைத்துறையினர், கலைஞர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொள்கிறார்கள்.

”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு பற்றி விளக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு 10-2-2018 அன்று காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது.

பத்திரிக்கையாளர் சந்திப்பு காணொளி

https://www.youtube.com/watch?v=ls6jg3amZ3U

”தமிழீழம் என்பது தமீழீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட” என்ற முத்துக்குமாரின் வரிகள் ஏன் முக்கியம் வாய்ந்தவை என்பதை உரக்கப் பேசும் மாநாடு இது.

மீத்தேன், நியூட்ரினோ, மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என அனைத்துக்கும் போராடி வந்தாலும் நாம் இன்னும் தமிழீழத்தை மறக்கவில்லை எனக் காட்டுவோம்.

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்துகிற, தமிழீழ விடுதலையை நேசிக்கிற அனைவரும் கூடுவோம்.

 

பிப்ரவரி 18, 2018  ஞாயிறு 

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை.

அண்ணா அரங்கம்

(சென்னை பல்கலைக்கழகம் பின்புறம்

தூர்தர்சன் தொலைக்காட்சி நிலையம் அருகில்)

சேப்பாக்கம், சென்னை.

 

மாநாடு குறித்த விளக்க காணொளி

https://www.youtube.com/watch?v=m8O-z3EMzF4

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *