மயிலாடுதுறையில் ரயில் தடம் புரண்டு விபத்து.


மயிலாடுதுறை வழியே ரயில் போக்குவரத்து சரி செய்ய பல மணி நேரம் ஆகும் என்பதால் மாற்று ஏற்பாடுகள் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

கோயமுத்தூரில் இருந்து மயிலாடுதுறைக்கு வார நாட்களில் செவ்வாய்க்கிழமை தவிர ஜன சதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. காலை கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வந்து சேர்ந்து மீண்டும் மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்லும்.

16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் சுமார் 1, 500-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்வர்.

இன்று கோயமுத்தூரில் இருந்து மயிலாடுதுறை வந்த ஜன சதாப்தி ரயில் மயிலாடுதுறை ரயில்வே நிலையம் அருகே ஒரு வளைவில் திரும்பும் போது இன்ஜின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு புரண்டு தடுமாறியது.

ரயில் டிரைவர் ரயிலை சாமர்த்தியமாக நிறுத்தியதால் 10 ஸ்லீப்பர் கட்டைகள் மட்டுமே உடைந்து சேதமடைந்தது. பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் இருப்புப் பாதை வழியே நடந்து ரயில்வே நிலையத்தை சென்றடைந்தனர்.

நன்றி-news18



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *