திருகோணமலையில் உயிருடன் இருக்கின்றார்!


புலம்பெயர் நாடுகளில் சேகரிக்கப்பட்ட எந்தவொரு நிதியும் பாதிக்கப்பட்டவர்களிற்கு கிடைக்கவில்லை. எமது பிள்ளைகளை வியாபார பொருளாகவோ, அரசியல் வாக்குகளிற்காகவோ பயன்படுத்தாதீர்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த ஊடக சந்திப்பு வடக்க கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியின் இல்லத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையியே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது பிள்ளைகளை வைத்து இன்று பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த செயற்பாட்டை சில அமைப்புக்களும் முன்னெடுக்கின்றனர். அதேபோன்று தற்போது தனி நபர்களும் ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி வன்னேரிகுளம் பகுதியை சேர்ந்த இந்த தாயாரின் பிள்ளையின் புகைப்படத்தை வைத்து இருவர் நிதி சேகரித்துள்ளனர். இந்த தாயாரின் பிள்ளை படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது இந்த புகைப்படம் அடங்கலான பல ஆவணங்களோடு சென்றிருந்தார். இந்த புகைப்படம் எவ்வாறு இவர்களிற்கு கிடைத்தது. இந்த உண்மையை அரசியல்வாதிகளும், எமது தமிழ் தலைமைகளும் உணரவேண்டும்.

அவர்கள் உணர்நது செயற்பட வேண்டும். இவ்வாறான நிலையில் எமது பிள்ளைகளின் நிலை தொடர்பில் அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். எமது பிள்ளைகளை வியாபார பொருளாக ஆக்க வேண்டாம். வெளிநாடுகளில் சேகரிக்கப்பட்ட நிதிகள் எதுவும் எந்த அரசியல்வாதிகளாலும் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கிடைக்கவில்லை.

எமது பிள்ளைகளை காட்சிப்படுத்தி நிதிகளை சேகரித்தாக அறிகின்றோம். எமது பிள்ளைகளை வியாபார பொருள் ஆக்காதீர்கள். அரசியல் வாக்கு தேவைகளிற்காகவும் பயன்படுத்தாதீர்கள். எமது பிள்ளைகள் சொந்த வீட்டு பிரச்சினைக்காக ஆயுதம் ஏந்தவில்லை.

அனைவரது பொதுவான பிரச்சினைகளிற்காகவும், உரிமைக்காகவுமே ஆயுதம் ஏந்தினார்கள். எனவே, எமது பிள்ளைகள் மேல் பற்றும், மரியாதையும் வைத்து விடுதலைக்காக எம்மோடு இணைந்து போராட வாருங்கள் என அவர் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் கரு்தது தெரிவித்த கிளிநொச்சி வன்னேரிகுளம் பகுதியை சேர்ந்த இந்திராதேவி என்ற தாயார் தெரிவிக்கையில்,

எனது மகளான ஜெயமதி 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவு பெற்றபோது இராணுவத்திடம் சரணடைந்தவர். இவரை அன்று முதல் தேடி வருகின்றோம். இந்த நிலையில் கடந்த மாதம் 5ம் திகதி எனது மகளின் புகைப்படத்துடன் ஒருவர் எமது பிரதேசத்தில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

அவரை நாம் அக்கராயன் பொலிசாரிடம் ஒப்படைத்தோம். எனது மகள் இந்த புகைப்படம் மற்றும் ஏனைய புகைப்படங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களுடன் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்றிருந்தார். அவரை அன்றுமுதல் நாம் காணாதவர்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

இந்த நிலையில் இவரது புகைப்படத்துடன் சிலர் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். அவரை நாம் அக்கராயன் பொலிசாரிடம் ஒப்படைத்தோம். குறித்த விடயம் தொடர்பில் புலனாய்வு பிரிவிற்கு தெரிவித்துள்ளதாகவும் , அவர்கள் இது தொடர்பில் ஆராய்வார்கள் எனவும் தெரிவித்தனர்.

எனது பிள்ளை இருக்கிறார். அவர் இல்லாது அவர் கொண்டு சென்ற புகைப்படம் எப்படி வெளியே வந்தது. அவர் உயிருடன் திருகோணமலையில் இருப்பதாகவும், அவரை கூட்டி சென்று காண்பிப்பதாகவும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் எனது பிள்ளையை கண்டுபிடித்து தாருங்கள் என அவர் ஊடகங்கள் ஊடாக தெரிவித்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *