இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மித்ர வெத்தமுனி காலமானார்


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மித்ர வெத்தமுனி இன்று காலமானார். இவர் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவரான சிதத் வெத்தமுனியின் சகோதரராவார்.

வெத்தமுனி சகோதரர்கள் மூவரும் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத பல சாதனைகளை நிலைநாட்டியவர்கள். சுனில், மித்ர மற்றும் சிதத் ஆகிய மூன்று சகோதரர்களும் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக திகழ்ந்தனர்.

மித்ர வெத்தமுனி 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். 1983 ஆம் ஆண்டு இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச டெஸ்ட் அரங்கிற்குள் அவர் பிரவேசித்தார்.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியினரால் முதல் தடவையாக இந்திய அணியினரை தோற்கடிக்க செய்தபோது, அணிக்கு மித்ர வெத்தமுனி தலைமைத்துவம் வழங்கினார்.

கொழும்பிலுள்ள இல்லத்தில் நேற்றைய தினம் முற்பகல் 11 மணியளவில் மித்ர வெத்தமுனி தனது 67 ஆவது வயதில் காலமானார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *