யாழ்ப்பாணத்தில் ராதிகா சிற்சபேசன்


கனடா நாட்டின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வுள்ள யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த ராதிகா சிற்­ச­பேசன் நேற்று யாழ்ப்­பா­ணத்­திற்கு திடீர் விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.

சுற்­றுலா விசாவில் விடு­மு­றைக்­காக இலங்­கைக்கு வந்­துள்ள அவர் நேற்­றுக்­காலை தெல்­லிப்­பழை – மாவிட்­ட­புரம் கந்­தசுவாமி கோவில், கீரி­மலை நகு­லேஸ்­வரம் ஆலயம் ஆகி­ய­வற்­றுக்குச் சென்று வழி­பா­டு­களில் ஈடு­பட்டார். பாராளு­மன்ற உறுப்­பினர் சி.சிறி­தரன், வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் திரு­மதி அனந்தி சசி­தரன் வலி வடக்கு பிர­தே­ச­சபை உறுப்­பினர் சுகிர்தன் ஆகி­யோ­ரையும் சந்­தித்­துள்ளார்.

உற­வினர் நண்­பர்கள் வீட்­டிற்கும் சென்ற அவர் வலி.வடக்­கி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்த மக்கள் தங்­கி­யுள்ள சுன்­னாகம் சபா­ப­திப்­பிள்ளை முகாமிற்கும் சென்று மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *