கொரோனா வைரஸ்: 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு – நரேந்திர மோடி அதிரடி


உலகை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை தகவலின்படி இன்று (மார்ச் 24) மாலை நிலவரப்படி 519 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 476 பேர் இந்தியர்கள், 43 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

கொரோனா வைரஸ்: இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் நரேந்திர மோதி உரைபடத்தின் காப்புரிமைMOHFW.GOV.IN

இந்நிலையில், கோவிட்-19 குறித்து நாட்டு மக்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்குப் பிரதமர் மோதி பேச உள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கடந்த மார்ச் 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி இரவு நாட்டு மக்களுடன் உரையாற்றினார்.

ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அப்போது மோதி தெரிவித்தார்.

”இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ளோர், போக்குவரத்து, உணவு, ஊடகம் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்கள் ஊரடங்கு நடக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் கைத்தட்டியோ, தங்கள் வீட்டின் அழைப்பு மணிகளை அடித்தோ நன்றி தெரிவிக்கவேண்டும்” எனவும் மோதி அந்த உரையில் குறிப்பிட்டு இருந்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

நாட்டு மக்களுடன் உரை நிகழ்த்துவதற்கு முன்பு மருத்துவர்களுடன் வீடியோ கான்பரசிங் மூலமாக ஆலோசனை நடத்தினார் மோதி.

மோதி உரை,

 • நான் மீண்டும் கொரோனா தொற்று குறித்து உங்களிடம் பேச வந்துள்ளேன்.
 • ஒவ்வொரு இந்திய மக்களும் இணைந்து ஊரடங்கை வெற்றிகரமானதாக்கினீர்கள்.
 • குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும்  இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்.
 • இந்த முயற்சிகள் அனைத்தும் இருந்தும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
 • கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க இதை தவிர வேறு வழியில்லை
 • இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே தனித்திருக்க வேண்டும் என தவறாக நினைக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு குடும்பமும் தனித்திருத்தலை கடைபிடிக்க வேண்டும்.
 • இன்று ஒரு முக்கிய முடிவை எடுக்க போகிறேன். இன்று இரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும், லாக் டவுன் செய்யப்படுகிறது. ஒவ்வொரு கிராமமும், மாவட்டமும் முடக்கப்படுகிறது.
 • இது ஜனதா ஊரடங்கை காட்டிலும் வலுவனாது.
 • உங்களிடம் கை கூப்பி வேண்டிக்கொள்கிறேன் தற்போது நீங்கள் நாட்டில் எங்கு உள்ளீர்களோ அங்கயே இருங்கள். இது 21 நாட்களுக்கு தொடரும்.
 • 21 நாட்களுக்கு வீட்டை விட்டு எங்கேயும் செல்லாதீர்கள். நீங்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் கொரோனாவை உங்கள் வீட்டுக்கு அழைத்து வரலாம்.
 • இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவரால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்படலாம் என் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
 • 67 நாட்களில் ஒரு லட்சம் மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அடுத்த 11 நாட்களில் அது இரண்டு லட்சம் ஆனது. அடுத்த நான்கு நாளில் மூன்று லட்சத்தை தொட்டது.
 • இந்த கொரோனா தொற்றை தடுப்பது மிகவும் கடினமானது.
 • இந்த 21 நாட்களை நாம் சமாளிக்கவில்லை என்றால் 21 ஆண்டுகள் நாம் பின் தள்ளப்படுவோம்.
 • ஊரடங்கு நேரத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்.
 • இந்த சமயத்தில்தான் நமது நடவடிக்கைகள் தான் இந்த கொரோனா தொற்றை தடுக்கும்.
 • வீட்டிலேயே இருங்கள் இந்த கொரோனா தொற்றுக்காக பணிபுரியும் மருத்துவ பணியாளர்கள் குறித்து சிந்தியுங்கள்.
 • இந்த கொரோனா தொற்றை சமாளிக்க ஆம்புலன்ஸ் டிரைவர் உள்ளிட்டோர் நமக்காக பணியாற்றுகின்றனர்.
 • ஊடகவியாளர்கள் குறித்தும் நீங்கள் யோசிக்க வேண்டும் உங்களுக்கு சரியான தகவல்களை தர அவர்கள் பணிபுரிகின்றனர்.
 • போலீஸார் குறித்து யோசியுங்கள் உங்களை காப்பாற்ற அவர்கள் 24 மணி நேரமும் பணி செய்கின்றனர்.
 • அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
 • நாட்டின் சுகாதார கட்டமைப்பை வலுவாக்க்க 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
 • இந்த சமயம் சுகாதார சேவைக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநில அரசுகளிடம் நான் வலியுறுத்தியுள்ளேன்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *