குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர் சபை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சட்டமசோதா மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தின் 4, 5 மற்றும் 6-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய அமைச்சர் சபை ஒப்புதல் அளித்தது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *