“4 -வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை”- (வீடியோ இணைப்பு)


கொலம்பியாவில் உள்ள மெடிலின் என்ற நகரில் சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனது குழந்தையுடன், லார்லெஸ் கொலோனியல் என்ற அடுக்குமாடி காட்டிடத்தில் இருக்கும் அலுவலத்திற்கு சென்றுள்ளார்.

4 -வது மாடியில் சென்றுகொண்டிருக்கும் போது, குழந்தை விளையாட்டாக மாடியின் பால்கனியை எட்டிப்பார்த்துள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி குழந்தை மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளது.

இதனை பார்த்த தாய் நொடியும் தாமதிக்காமல் தரையில் விழுந்து குழந்தையைப் பிடித்துள்ளார்.

பின்னர் அருகில் இருந்தவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக தாயும், குழந்தையும் எவ்வித காயமும் இல்லாமல் உயிர்தப்பினர்.

இவை அனைத்தும் அங்கு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி –  CCTV WorldLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *