இஸ்ரேலிய பிரதமர் இந்தியாவிற்கு விஜயம்!


இவர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒருநாள் பயணமாக டெல்லி வரும் பெஞ்சமின் நேதன்யாகுவின் நிகழ்ச்சி நிரல்கள் தொடர்பாக இந்திய அரசின் சார்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிப்படவில்லை.

இந்த விஜயத்தின் போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இஸ்ரேலில் கூட்டணி அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்காக பெஞ்சமின் நேதன்யாகு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தமை காரணமாகஇஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 17-ம் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் பெஞ்சமின் நேதன்யாகு இந்தியாவிற்கான விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *