கர்ப்பக்காலங்களில் ஆபத்தை உண்டாக்கும் மாத்திரை


பெண்களுக்கு கர்ப்பக்காலங்களில் மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்ளும் மாத்திரைகளே ஆபத்தை விளைவிப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக இரும்புச்சத்து குறைபாட்டுக்கு கொடுக்கப்படும் மாத்திரை ஆபத்தை தருகிறது என்கிறது ஆய்வு. இந்தியாவில் 33 சதவீத கர்ப்பிணிகள் அனிமீயா என்னும் ரத்த சோகையால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது. கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமாகும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

பெண்களுக்கு ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே போகும். இதனால் அடிக்கடி சோர்வுறுதல்,

மயக்கம், இடுப்பு மற்றும் கை, கால் வலி ஏற்படும். உடலில் ஏற்படும் சிறு வலியைக் கூட தாங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். இதைத் தடுப்பதற்காக

இரும்புச்சத்து மாத்திரைகள் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 9 மில்லி கிராம் இரும்புச்சத்து சாதாரண பெண்களுக்குத் தேவைப்படும்.

இதுவே கர்ப்பிணியாக இருந்தால் நாளொன்றுக்கு 27 மில்லிகிராம் வரை இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இதனால் மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக்

கொள்ளும் போது அது உடலில் நச்சுத் தன்மையாக மாறி உடலில் உள்ள வாயுவை அலர்ஜியுறச் செய்து பல தீங்குகளை உண்டாக்குவதாக கூறுகிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை. இதனால் மலச்சிக்கல், வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகி கருவில் உள்ள

குழந்தைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கும் இரும்புச்சத்து மாத்திரையை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

 

நன்றி : தினகரன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *