எல்லா நலமும் பெற: கருவளையம் போக்க… கனிகள்!


நடுவயதில் ரத்த அழுத்தம் வந்தால் இதய நோய் வருவதற்கான சாத்தியம் உள்ளதா?

ரத்த அழுத்த நோயால் நடுவயதில் பாதிக்கப்பட்ட ஆண்களில் 70 சதவீதம் பேருக்கு 85 வயதில் இதயச்சுவர் சிரை பாதிப்பு ஏற்படுகிறது. சராசரியாக 55 வயதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதய நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.

எலும்பு ஆரோக்கியத்துக்காக உட்கொள்ளும் கால்சியம் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுப்பதால் பாதிப்புகள் ஏதாவது வருமா?

அப்படித்தான் ஆய்வுகள் சொல்கின்றன. முதிய பெண்மணிகள் தொடர்ந்து கால்சியம் மாத்திரைகளை உட்கொண்டால் மாரடைப்பு ஏற்படுகிறது. கால்சியம் சத்து அதிகம் கொண்ட உணவைச் சாப்பிடுவதே சிறந்தது.

கண்ணில் வரும் கருவளையங்களை எப்படி சரிப்படுத்தலாம்?

சரியான உறக்கம் அவசியம். சர்க்கரையைக் குறைத்து ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த கனிகளையும் உணவுப்பொருட்களையும் சாப்பிடவும். ஒவ்வாமை காரணமாகவும் இப்படி நடக்கலாம். கண்ணுக்குக் கீழே உள்ள ரத்தத் தமனிகள் சேதப்படாமல் இருக்க குளிர்க்கண்ணாடி அணியலாம். பிளாக் டீ பைகளை நனைத்து கண் மேல் வைக்கலாம்.

ஒருவர் தும்மும்போது வெளியேறும் நீர் என்ன ஆகிறது?

நாம் தும்மும்போது வெளியே வரும் நீர்த்துளிகள், பெரிய துளிகளைவிட 200 மடங்கு அதிகம் தூரம் பயணிக்கும். குளிர்சாதனப் பெட்டிகளின் குழாய்கள் வாயிலாக அடுத்தடுத்த அறைகளுக்குக்கூடப் பயணிக்கும். அதனால் கைக்குட்டை வைத்தோ முகத்தை மூடியோ தும்முவதே ஆரோக்கியமானது.

புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் எவை?

திடீர் எடை இழப்பு, இருமலின் போதும், சிறுநீரிலும், மலத்திலும் ரத்தம் வருவது. கழுத்து, கக்கம், தொடையிடுக்கு, மார்பில் கட்டி தோன்றுவது.

 

நன்றி : தி இந்து | ஷங்கர்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + one =