ரிலாக்ஸ் ப்ளீஸ்..

7 views

உடல் அழுத்தம், மன அழுத்தம் என இரண்டு அழுத்தங்கள் இருக்கின்றன. காலையில் தூங்கி எழும்போது உடல் புத்துணர்வோடு இருக்க வேண்டும். அதற்கு மாறாக களைப்படைந்ததுபோல இருந்தால் உடலில் அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம். அதனால்தான் Sound mind in a sound body என்று சொன்னார்கள். யாருக்கு உடல் பலமாக இருக்கிறதோ, அவர்களுக்கே மனபலமும் இருக்கும் என்ற அர்த்தத்தில் சொன்னார்கள். இன்றோ உடல்நலக்குறைவால் ஏற்படும் மன அழுத்தத்தைவிட வாழ்க்கைமுறைகளால் ஏற்படும் மன அழுத்தமே அதிகம். குழந்தைகள் கூட ‘ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த மன அழுத்தத்துக்கு பிராணாயாமமும் தியானமும் நல்ல நிவாரணி. மனதுக்கும் மூச்சுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கோபமாக இருக்கும்போது நம் மூச்சு வேகமாக இருப்பதையும் அமைதியாக இருக்கும்போது மூச்சு சீராக இருப்பதையும் கவனித்துப் பாருங்கள். ஆகவே, மூச்சு சீராக இருக்கப் பயிற்சி எடுத்தால் மன அழுத்தம் தானாகவே குறைந்து, மனம் அமைதியடையும். செய்யும் வேலைகளில் கவனமும் இருக்கும். மூச்சுப்பயிற்சி செய்யச்செய்ய, தேவையற்ற எண்ணங்கள் தானாகவே குறைய ஆரம்பித்துவிடுவதை நீங்களே அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்!One thought on “ரிலாக்ஸ் ப்ளீஸ்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + eleven =