சிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய 10 விஷயங்கள்!

20 views

சிசேரியன் செய்துக் கொள்வது ஃபேஷன் ஆகிவிட்டது என நிறைய பேர் கூறுவதுண்டு. இதற்கான முக்கிய காரணம், தற்போதைய பெண்களுக்கு உடல் வலிமை அதிகமாக இல்லை. அதையும் தாண்டி அவர்களிடம் மன வலிமையையும் குறைவாக தான் இருக்கிறது.

எங்கு சுக பிரசவத்தின் போது வலி தாங்க முடியாமல் ஏதாவது ஆய்விடுமோ என்ற அச்சமும் பெண்கள் மத்தியில் நிலவுகிறது. இதனாலேயே பல தம்பதிகள் பணம் செலவானாலும் பரவாயில்லை சிசேரியன் செய்துக் கொள்கிறோம் என கூறுகின்றனர்.

ஆனால், நீங்கள் நினைப்பது தவறு. குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் தான் சிசேரியன் செய்வதில் சுலபம். ஆனால், அதன் பிறகு மீண்டும் ஆரோக்கியம் அடைவது, இயல்பான வேலைகளில் ஈடுபடுவது, ஏன் பெண்கள் கழிவறை சென்று வருவது கூட கடினம் தான்.

01. சிசேரியன் செய்தவர்களுக்கு ஓரிரு வாரங்கள் வலி அதிகமாக தான் இருக்கும். இதை தவிர்க்க, மருத்துவர்களே சில வலிநிவாரணி மருந்துகளைதருவார்கள். இது தற்காலிகமாக வலி இல்லாமல் இருக்க உதவும்.

02. புரோபயாடிக்ஸ் உணவுகள்! சிசேரியன் ஆன பெண்கள், புரோபயாடிக் உணவுகள் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருந்து கிடைக்கும் நல்ல பாக்டீரியா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து ஆரோக்கியத்தை வலிமையடைய செய்கிறது. தயிர் ஓர் சிறந்த புரோபயாடிக் உணவு.

03. கீறல்கள்! சிசேரியன் செய்ததால், கீறல்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கும். எனவே, அந்த இடத்தில் அதிக அழுத்தம் தராமலும், தொற்று ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக குளிக்கும் நீரினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

04. நடைப்பயிற்சி! ஆம், சிசேரியன் என சொல்லிக் கொண்டு படுக்கையில் படுத்துக் கொண்டே இருக்க வேண்டாம். நேரம் கிடைக்கும் போது கொஞ்ச நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். இது உடலில் இரத்த கட்டிகள் உண்டாகாமல் இருக்க உதவும்.

05. உணவுகள்! சிசேரியன் செய்த பெண்கள் ஊட்டச்சத்துக்களில் நிறைய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக வைட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்த உணவுகள். இவை, தசை வலிமை அடைய வெகுவாக உதவும் உணவுகளாகும்.

06. மலச்சிக்கல்! பிரசவத்திற்கும், முன்னும், பின்னும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக சிசேரியன் செய்த பெண்கள் உட்கார்ந்து எழுந்து மலம் கழிக்க முயற்சிக்கும் போது அழுத்தம் அதிகரித்து இரத்த கசிவு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, உதவிக்கு ஸ்டூல் வைத்துக் கொள்வது நல்லது. மேலும், மறவாமல் நார்ச்சத்து உணவுகள் உட்கொள்ளுங்கள் இது, மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.

07. தாய்பால்! தாய்பால் தருவது குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்க்கும் நல்லது. எனவே, குறைந்தபட்சம் ஆறு மாதத்தில் இருந்து 1 ஆண்டு வரைக்குமாவது தாய்பால் கொடுங்கள்!

08. அதிக எடை! அதிக எடை கொண்ட பொருட்களை தூக்க வேண்டாம். இது சிசேரியன் செய்த இடத்தில் அதிக வலியை உண்டாக்கும்.

09. க்ரஞ்சஸ்! ஜிம்மிற்கு செல்லும் பெண்கள், சிசேரியன் செய்த சில மாதங்கள் வரை க்ரஞ்சஸ் பயிற்சி செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.

10. உடலுறவு! சிசேரியன் செய்த பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது வலி அதிகமாக இருக்கும். இது சிசேரியன் செய்த 18 மாதங்கள் வரை கூட இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

11. மனோதைரியம்! என்ன தான் உணவு, பயிற்சி என்று இருந்தாலும். கணவன், அம்மா போன்றவர்கள் உடன் இருந்து அந்த பெண்ணுக்கு மனோதைரியம் அளிப்பது தான்அவர்கள் வேகமாக ஆரோக்கியம் அடைய உதவும்.

 

நன்றி : பிரியா ஆனந்த் | இன்று ஒரு தகவல்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 18 =