உலக அழகி போட்டி


2017-ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி சீனாவின் சானியா நகரில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 118 பேர் பங்கேற்றனர். இந்த பிரம்மாண்டமான போட்டியில், இந்தியா சார்பாக ஹரியானாவைச் சேர்ந்த 21 வயது மருத்துவ மாணவி மானுஷி ஷில்லார் கலந்து கொண்டார். இறுதி சுற்றில் அவர் வெற்றிபெற்று உலக அழகியாக கிரீடம் சூட்டப்பட்டார்.
ஏற்கனவே, 2017-ஆம் ஆண்டுக்கான இந்திய அழகி பட்டத்தையும் மானுஷி ஷில்லார் வென்றது குறிப்பிடத்தக்கது.
 பதினேழு ஆண்டுகளுக்குப்பின் இந்திய பெண் ஒருவர் உலக அழகி பட்டம் வெல்வது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு 2000-ஆம் ஆண்டில், பிரியங்கா சோப்ரா இந்த பட்டத்தை வென்றிருந்தார். மானுஷி ஷில்லார் உலக அழகியானதன்மூலம் 6-வது இந்தியப் பெண் என்ற பெருமையும் பெற்றார்.
 108 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு மத்தியில் அவர் இந்த பட்டத்தை வென்றுள்ளார். இதையடுத்து 2016-ஆம் ஆண்டு உலக அழகி ஸ்டெஃபனிடெல் வாலே அவருக்கு மகுடம் சூட்டினார்.
 உலக அழகிப் போட்டி, உலகின் நான்கு பெரிய அழகிப் போட்டிகளுள் ஒன்றாகும். மிஸ் வேர்ல்டு மற்றும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி இரண்டுமே 1951-ஆம் ஆண்டு தொடங்கியவை.
 உலக அழகிப்போட்டியைத் தொடங்கி வைத்தவர் எரிக் மோர்லி. 2000-இல் அவரது மறைவுக்குப் பின்அவரது மனைவியும் அமைப்பின் இணைத்தலைவருமான ஜூலியா மோர்லி அழகிப் போட்டியை நடத்தி வருகிறார்.
 உலக அழகிப் பட்டம் வெல்பவர் அந்த ஓராண்டு முழுவதும் லண்டனில் தங்குவார். மேலும் அவர் உலகெங்கும் பயணம் செய்து அவ்வமைப்பைப் பற்றியும், அமைப்பின் செயல்பாடுகள் பற்றியும் பிரதிநிதித்துவம் செய்வார்.
இப்போட்டி ஆரம்பத்தில் அன்றைய நீச்சலுடையை அறிமுகம் செய்யும் “நீச்சலுடைப் போட்டி’யாகவே தொடங்கியது. மேலும் அப்போது அது ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தவும் திட்டமிடப்படவில்லை. ஆனால் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியென ஒன்று தொடங்கவிருப்பதைஅறிந்த மோர்லி, இதனை ஆண்டுதோறும்தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டார்.
1951-இல் நடந்த போட்டிக்குப் பின், வெற்றி பெற்றவர் நீச்சலுடை அணிந்து மகுடம் சூட்டுவது கைவிடப்பட்டது. 2013-இல் நீச்சலுடையுடன், பங்கேற்கும் அழகிகளின் தேச கலாச்சாரத் துக்குக்கேற்ப சராங் எனும் ஒருவகை ஆடையுடன் மகுடம் சூட்டிக்கொண்டனர்.
 1980 முதல் பிபிசி இந்நிகழ்வை ஒளிபரப்பத் தொடங்கியது. 1960-1970 களில் பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்வாக “மிஸ் வேர்ல்டு’ போட்டி திகழ்ந்தது. ஆனால் 1970-இல் பெண் விடுதலை இயக்கத்தினர் தண்ணீர்த் துப்பாக்கி, துர்நாற்ற வெடிகுண்டுகள், மாவுக் குண்டுகளை எறிந்து இடையூறு செய்தனர்.
1980-இல் இப்போட்டி “ஒரு நோக்கத்துடன்கூடிய அழகு’ எனும் வாசகத்துடன், போட்டியில்ஆளுமை, அறிவுக்கூர்மையை மதிப்பிடும்தேர்வுகள் சேர்க்கப்பட்டன. எனினும், அப்போது அப்போட்டிக்கு பிரிட்டனில் செல்வாக்கு குறைந்தது.
எனவே, பிரிட்டிஷ் தொலைக்காட்சிகள் அழகிப் போட்டியை ஒளிபரப்ப ஆர்வம் காட்டவில்லை.
தற்போது நடுவர்களின் மதிப்பெண்களுடன்,போட்டியில் பங்கேற்கும் அழகிகளும், தொலைபேசி வழியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ”என்னைத் தேர்ந்தெடுங்கள்’ எனக் கேட்டு மதிப்பெண்கள் பெறலாம்.
 மிஸ் வேர்ல்டு அமைப்பு இறுதிப் போட்டியைமட்டுமே நடத்துகிறது. நூறு நாடுகளுக்கும்மேலாக அதன் கிளை அமைப்புகள் பரவியுள்ளன. இவ்வமைப்பு குழந்தைகளுக்கான நல நிதியாக 250 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக நிதி திரட்டியளித்துள்ளது. தவிரவும் மிஸ் வேர்ல்டு இறுதிப்போட்டி நடக்கும் நாடுகளில் சுற்றுலாத் துறை வளர்ச்சியடைகிறது.
 இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெறுபவர்கள் அதற்கு முந்தைய வருடம் மிஸ் வேர்ல்டு கிளை அமைப்பு நடத்தும்போட்டிகளிலோ அல்லது சிறப்பு மிஸ் வேர்ல்டுதேசிய ஆரம்பச்சுற்றுப் போட்டிகளிலோ தேர்வு பெற்றிருக்க வேண்டியது அவசியம். இறுதிப்போட்டி கிட்டத்தட்ட ஒரு மாத காலம், பல்வேறு தகுதிப்போட்டிகள், விருந்துகள் என நடைபெறும். இறுதியில் 15 லிருந்து 20 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில் ஒருவர் மிஸ் வேர்ல்டாக அறிவிக்கப்படுவார்.
இந்தியாவை சேர்ந்த ஐஸ்வர்யா ராய் முதன்முறையாக உலக அழகி பட்டம் வென்றவர் ஆவார். மேலும் பிரியங்கா சோப்ரா, ஹெய்டன் உள்ளிட்டவர்கள் இப்பட்டம் வென்றுள்ளனர்.
மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்றவர்களில் நான்கு பேர் மிஸ் போட்டோஜெனிக் விருதையும் பெற்றுள்ளனர். அவர்கள் ஆஸ்ட்ரிட் கரோலினா,ஐஸ்வர்யா ராய், ஜாக்குலின் அகியுலேரியா, டயானா ஹெய்டன் ஆவர்.
2017 உலக அழகி போட்டியின் கடைசி கேள்வியாக, எந்த பணியில் ஈடுபடுபவருக்கு உலகின் அதிகமான வருமானம் அளிக்க வேண்டும், எதற்காக அவ்வாறு அளிக்க வேண்டும் என்று மானுஷி ஷில்லாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மானுஷி ஷில்லார், “”என்னுடைய மிகப்பெரிய உத்வேகம்என் தாயார் தான். அம்மாவாக இருப்பதேசிறந்த பணி. ஆனால் அவர்களுக்கு பணமாக இல்லாமல், அன்பு மற்றும் மரியாதையாக நாம் சம்பளத்தை அளிக்க வேண்டும்” என்றார்.
மானுஷி ஷில்லார் பெண்களுக்கு ஏற்படும்மாதவிடாய் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வுஏற்படுத்தி வருகிறார்.  இதனால் தற்போது வரை 5000 பெண்கள் பயனடைந்து உள்ளதாகவும் மானுஷி கூறினார்.
நன்றி : நக்கீரன்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + one =