சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர். லோக்கல் விரைவில்…


ராஜேஷ், எம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடித்து வரும் புதிய படத்திற்கு மிஸ்டர்.லோக்கல் என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்ட்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழில் சிவா மனசுல சக்தி படம் மூலம் இயக்குநராக கால்பதித்தவர் எம்.ராஜேஷ். கடந்த 2016ம் ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படம் வரவேற்பு பெற தவறியது. அதை தொடர்ந்து இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் இந்த படம் எஸ்.கே 13 என்ற பெயரில் அடையாளம் பெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பும், முதல் பார்வை போஸ்ட்டரும் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. மிஸ்டர். லோக்கல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம், சிவகார்த்திகேயன் நடிக்கும் 13வது படமாகும்.

ஸ்டூடியோ க்ரீன் சார்பில் கே.இ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். சென்னையிலிருந்து பாரிசுக்கு செல்லும் கதாநாயகன், அங்கு சந்திக்கும் சம்பவங்களே படத்தின் கதை.

எம்.ராஜேஷ் படங்களுக்கே உரித்தான நகைச்சுவை, அதிரடி, காதல் உள்ளிட்ட அம்சங்களுடன் சிவகார்த்திகேயன் படங்களுக்கு ஏதுவான அம்சங்களும் மிஸ்டர். லோக்கல் படத்தில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + five =