பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்


பூணூல் அணிந்தல், Mucubal-African-tribe
பூணூல் அணிந்தல்,  Mucubal-African-tribe

ஐயர், ஐயங்கார், ஆசாரி, வேளார், வாணியச் செட்டியார்  மற்றும் சில  சமூகத்தினர்கள் பூணூல் அணிந்து கொள்கின்றனர்.  மற்றபிற சமூகத்தினர்கள் முன்னோர்களுக்குத் திதி தர்பணம் கொடுக்கும் போது, சாதிவேறுபாடு இல்லாமல் அனைவரும் பூணூல் அணிந்து கொள்கிறனர்.

வாலிபவயது துவங்கும்போது ஓர் நூல் அணிந்து கொண்டு தந்தையிடமோ குருவிடமோ உபதேசம் பெற்றுக் கொள்கின்றனர்.  பின்னர் திருமணத்தின் போது இரண்டாவது நூல் சேர்த்து அணிந்து கொள்கின்றனர். பிள்ளை பிறந்தபின் மூன்றாவது நூல் அணிந்து கொள்கின்றனர்.

இவ்வாறு மூன்று நூல்களால் ஆனதை “முப்புரி நூல்” அல்லது பூணூல் என்கின்றனர்.  இடதுதோலில் அணிந்து வலதுகைப்பக்கம் தொங்குமாறு பூணூலை அணிந்து கொள்கின்றனர்.  இறந்தவர்கள்குக்குத் திதி தர்ப்பணம் செய்யும்போது வலதுதோளில் அணிந்து இடதுகைப்பக்கம் தொங்குமாறு பூணூலை அணிந்து கொள்கின்றனர்.

ஆனால் ஆப்பிரிக்காவில் உள்ள பழங்குடியினரும் பூணூல் அணிந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது வியப்பாக உள்ளது. இவர்கள் பண்டைத் தமிழர்களது பண்பாடு உடையவர்களா?

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

நன்றி – கி. காளைராசன்


3 thoughts on “பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்

  1. “வணக்கம் இலண்டன்” வலைத்தளத்தில் எனது இந்தக் கட்டுரையைப் பதிப்பிட்டதற்கு நன்றி.

  2. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. மிகவும் பயனுள்ள பதிவு. தொடர்ந்தும் தங்கள் பதிவுகளை எமக்கு அனுப்பித் தாருங்கள். vanakkamlondon@gmail.com

    வணக்கம் இலண்டனுக்காக பூங்குன்றன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *