அடையாளம்! | கவிதை | முல்லை அமுதன்


தேடுவாரற்றுக் கிடந்த

அடர்ந்த மணற்புதருக்குள்

இருந்து எடுத்துவந்தார்கள்.

முகம் சிதைந்திருந்தது.

 

உடல் அமைப்பைக்கொண்டு

அடையாளம் கண்டு

முடியாமல் இருக்கிறது என்றார்கள்.

 

அவசரவண்டியுடன்,

காவல்துறையினரும்

வருவதாக

பேசிக்கொண்டார்கள்.

 

ஆங்காங்கே குண்டுகள் பட்டு

குருதியின் அடையாளத்தையும் கண்டார்கள்..

 

கள்வனாக இருக்குமோ?

குழு மோதலிலும் இறந்திருக்கலாம்.

பணத்திற்காகவும்

கொன்றிருக்கலாம்.

 

எப்படி?

கிழிந்திருந்த

சட்டைப்பையிலிருந்து ஒருவன்

உருவி எடுத்தான்.

 

கவிதை..என்னை அடையாளப்படுத்தியது.

 

– முல்லை அமுதன்

 2 thoughts on “அடையாளம்! | கவிதை | முல்லை அமுதன்

 1. கவிதை.

  இந்தியாவின்
  மாநிலமாய்
  மாறுகிறது
  வடக்கு.

  இடுகாடு பேசுகிறது
  1987இல் பொட்டலம் போட்டு
  பசி தீர்க்க வந்த இந்திய இராணுவம்

  எம்மவரை
  கொன்று சுடுகாடாக்கி
  அகதியாக்கி வெளியேறிப்போனது

  மீண்டுமது 2009
  தமிழனின் ஒருபகுதியை
  ஒழித்துக்கட்டி, இடுகாடாக்கி
  அன்று அனாதையாக்கிப்போனவன்

  2019இல் மீண்டும்
  சர்வதேச விமான நிலையம்
  எம்மக்களின் இடுகாட்டில் அமைக்க

  எங்கள் நிலத்தை
  மீதியாக வாழும் எம்மினத்தை
  கருவறுக்க மறுபடியும் வருகிறான்

  வெட்கம்
  கெட்ட தமிழ்
  அரசியல் புகழாரம்.

  நாம்
  மறவோம்
  எதையும் நாம்
  ஒருபோதும் மறக்கோம்.

  யோகாபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *