முல்லைத்தீவில் கப் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி இருவர் பலி!


முல்லைத்தீவு மாங்குளத்திலிருந்து இன்று (10-07-2019)மாலை மல்லாவி நோக்கி பயணித்த கப் ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வடகாடு பகுதியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் போது வாகனத்தில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த ஒருவரின் சடலம் மல்லாவி வைத்தியசாலையிலும் மற்றையவரின் சடலம் மாங்குளம் வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.

இதன் போது பாலிநகர் வவுணிக்குளத்தைச் சேர்ந்த ஜீவகுமார் ஜெனிஸ்குமார் (வயது-18) குனாளன் டிசாந்தன் (வயது-18) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *