இலங்கையில் நபர் ஒருவரை எரித்துக்கொலை


மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் நபர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வாழைச்சேனை – கண்ணகிபுரத்தை சேர்ந்த 58 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சந்தேகநபரைப் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்துள்ளதாகவும், அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *