கிளிநொச்சியில் காப்புறுதி முகாமையாளர் வெட்டிக்கொலை


கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிரேமரமணன் (32) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா வேப்பன்குளத்தை சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் அறியப்படுகின்றது. இன்று காலை தனது அலுவலகப் பணிப்பாளருடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு உதயநகர் கிழக்கில் தங்கியிருக்கும் இடத்திலிருந்து புறப்படும்போதே உந்துருளியில் வந்த ஒருவர் சரமாரியாக வெட்டியுள்ளார்.

தலை, கை, கால் மற்றும் உடம்பில் வெட்டுக்காயங்களுக்குள்ளான அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் உயிரிழந்துள்ளார். வெட்டிய நபர் கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளாதாக தெரியவருகின்றது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *