இவர்களை கொலை செய்ய புலிகள் திட்டமாம்! அதற்காகவே பளை வைத்தியர் கைதாம்


எதிர்வரும்  தேர்தல் காலப்பகுதியில் தெற்கில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. முக்கிய நபர்கள் மற்றும் பொதுமக்களை இலக்குவைத்தே இந்த தாக்குதலிற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக பிரதான சிங்கள ஊடகமொன்று இந்த செய்தியினை வௌியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளை மையப்படுத்திய குழுவொன்றே இந்த தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டருந்ததாகவும் பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு  சி 4 ரகம் கொண்ட 200 கிலோ கிராம் கொண்ட அதி திறன் கொண்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்படவிருந்தாக  தெரிவிக்கப்படுகின்றது,

கிளிநொச்சி பளை வைத்தியசாலையில் பணியாற்றிய நிலையில் கைதான  சின்னையா சிவரூபனிடம் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளிலேயே இந்த விடயம்  தெரியவந்துள்ளதாக குறிப்பிடத்து.

அத்துடன் இவர்களின் இலக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரை  இலக்குவைத்தே தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தாக  தெரிவிக்கப்படுகின்றது,

விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் ,பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை கொலை செய்வதற்கான திட்டங்களும் இதன் போது வௌிவந்துள்ளதாக கைது செய்யப்பட்ட சின்னையா சிவரூபன் பகிரங்கப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,

தமது மருத்துவ தொழிலினை முன்னிறுத்தி சின்னையா சிவரூபன் ஆயுதங்களை சேகரித்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை மறுசீரமைத்துள்ளதாக அந்த சிங்கள ஊடகம் குறிப்பிடுகின்றது. அத்துடன் இலங்கை இராணுவத்தின் முக்கிய நபர்கள் வௌிநாடு செல்லும் போது அவர்களை கொலை செய்வதற்கும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *