ரப்பர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்ட தொழிலாளர்கள்!


மலேசியாவுக்கு கடத்தி செல்வதற்காக தெற்கு தாய்லாந்தில் உள்ள ரப்பர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 57 மியான்மர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏஜெண்ட் மூலம் மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக தாய்லாந்துக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த நிலையில் தாய்லாந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

ரப்பர் தோட்டம் ஒன்றில் 54 ஆண்களும் 3 பெண்களும் இருந்த பொழுது சுற்றிவளைத்ததாக தாய்லாந்து மனித கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

தாய்லாந்தின் சோங்கிலா மாகாணத்திலிருந்து மலேசிய எல்லை சுமார் 100 கிலோ மீட்டருக்குள் அமைந்திருப்பதால், இவ்வழியாக அண்டை நாட்டுத் தொழிலாளர்கள்/ குடியேறிகள்/ அகதிகள் கடத்தப்படுவது வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகின்றது.

இப்பகுதியில் குடியேறிகல் வாரந்தோறும் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகின்றது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *