சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் | நடராஜனின் இறுதிச் சடங்கு


சசிகலாவின் கணவர் நடராஜனின் மறைவை அடுத்து இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவரது மனைவி சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி இருந்தமை எல்லோரும் அறிந்ததே.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கு காரணமாக 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன்படி சசிகலாவின் உறவினரும் வக்கீலுமான அசோகன் சசிகலாவை  சிறையிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டு திரும்ப வந்து ஒப்படைப்பேன் என்று சசிகலா தரப்பில் சிறை சூப்பிரண்டிடம் உறுதி மொழி பத்திரம் தாக்கல் செய்தார்.

இதையடுத்து சசிகலாவை பெங்களூர் சிறையில் இருந்து தஞ்சைக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை அவரது உறவினர்களும், வக்கீல்களும் செய்தனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *