நம்பிக்கை நாயகி! | முகமது ஹுசைன் 


ஹாலிவுட்டின் படைப்புத்திறன் உச்சத்தில் இருந்த 1930-களில் கொடிகட்டிப் பறந்த நாயகி மெர்லின் டயட்ரிச் (Marlene Dietrich). 1901-ல் பெர்லினில் பிறந்தார். 1930-ல் வெளிவந்த ஜெர்மனியின் முதல் பேசும் படமான Der Blaue Engel-ல் நாயகியாக நடித்தார்.

அந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த லோலாலோலா எனும் பாடகி வேடம் அவரைப் புகழின் உச்சியில் ஏற்றியது. அந்தத் திரைப்படம்தி புளு ஏஞ்சல்எனும் பெயரில் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டபோதும் அவரே நாயகியாக நடித்தார். அந்தப் படத்தை இயக்கிய ஜோசஃப் ஸ்டெம்பெர்க்கின் படங்களில் மெர்லின் தொடர்ந்து நடித்தார்.

மொரொக்கோ’, ‘ஷாங்காய் எக்ஸ்பிரஸ்’, ‘தி டெவில் இஸ் வுமன்போன்ற படங்கள் மெர்லினை ஹாலிவுட் திரையுலகின் முகமாக்கின. அவரது நடிப்பைப் போலவே குரலும் உடல்மொழியும் தனித்துவமானவை. நடிப்பில் அவர் சுயம்பு. புற அழுத்தங்களைப் புறந்தள்ளி, தனது பாணியிலேயே இறுதிவரை நடித்தார்.

மயங்கவைக்கும் அழகும் கம்பீர ஆளுமையும் கொண்ட மெர்லின் ஏற்று நடித்த பாத்திரங்கள் அனைத்தும் பெண்களுக்கு உத்வேகமும் நம்பிக்கையும் அளிப்பவையாக இன்றும் உள்ளன. அவரது 116-வது பிறந்த நாளையொட்டி கடந்த வியாழன் அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

நன்றி : tamil.thehindu.comLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *