மனித நாகரிகத்தின் முழுமையான அழிவைத் தவிர்ப்பது கடினமே!


கனடாவில் இருந்து வெளியாகும் நேஷனல் போஸ்ட் என்ற பத்திரிக்கையில் ட்ரிஸ்டின் ஹோப்பர் (Tristin Hopper) என்பவர் 18.3.2014 அன்று எழுதிய ஒரு கட்டுரை சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. அதைக் கீழ் கண்ட இணைப்பில் காணலாம்.

http://news.nationalpost.com/2014/03/18/the-utter-collapse-of-human-civilization-will-be-difficult-to-avoid-nasa-funded-study-says/

அதன் தமிழ் மொழி பெயர்ப்பு கீழே தரப்பட்டு உள்ளது:

***

அமெரிக்க அரசின் தேசிய விமான மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (NASA – Natonal Aeronautics and Space Administration) கணித வல்லுநர்கள் மனித சமூகத்தை இயக்கும் கூறுகளை எண் வகைப்படுத்தி, அவற்றைப் பிரதிபலிக்கும் நான்கு கணிதச் சமன்பாடுத் தொகுப்புகளில் பயன்படுத்திப் பார்த்து, இனி மனித நாகரிகத்தின் முழுமையான அழிவைத் தடுப்பது கடினம் என்கின்ற முடிவிற்கு வந்து இருக்கிறார்கள்.

earth 620உண்மையான காரணிகளின் அளவுகள் அறிஞர்கள் கூறுவதை விட மாறுபடலாம்; ஆனால் வரும் பத்தாண்டுகளில், மேட்டுக்குடி மக்களின் அளவுக்கு அதிகமான நுகர்வினால் பொது மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு அதனால் மனித குலமே அழிவுக்கு உட்படும் படியான தண்டனை அடையும் என்பதில் மாறுதல் இருக்காது.

அதாவது உள்ளோர் இல்லோர் இடையிலான இடைவெளியைப் பெருமளவில் குறைத்தே தீர வேண்டும்; அல்லது உலக மக்கள் தொகை மிகவும் குறைக்கப்பட வேண்டும் என்ற இரண்டில் ஒரு முடிவை மனித இனம் எடுத்தால் ஒழிய, அதன் அழிவைத் தடுத்து நிறுத்த முடியாது. அமெரிக்க அரசு நிறுவனமான தேசிய விமான மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கணித வல்லுநரான ஸஃபா மொடிஷரி (Safa Motesharrei) தலைமையிலான குழுக்களின் மூலமாக மனித இன அழிவைக் குறிக்கும் இச்செய்திகள் “சூழலியல் பொருளாதாரம்” (Ecological Economics) பத்திரிக்கையின் வரும் இதழ்களில் வெளிவர உள்ளன.

பலரும் அறியாத இச்செய்தி அண்மையில் பிரிட்டனின் ‘தி கார்டியன்’ (The Guardian) பத்திரிக்கையில் வெளி வந்தது. இதில் நஃபீஸ் அஹமத் (Nafeez Ahmed) என்ற சுற்றுச் சூழல் எழுத்தாளர் ‘எழுமின் விழிமின்’ என்ற விதத்தில் மனித சமூக இயக்கத்தில் உடனடியாக மாற்றங்கள் தேவை என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது வரையிலும் சுற்றுச் சூழலியல்வாதிகள், சமூகவியலளர்கள், அமெரிக்க நாட்டுக் குடியரசுக் கட்சியின் தீவிர உறுப்பினர்கள் ஆகியோர் மட்டும் அல்லாது தொடர் வாழ்வியலாளர்களும் (Survivalists) மேற்கண்ட இந்த 32 பக்க ஆய்வின் முடிவுகளை ஏற்றுக் கொண்டு உள்ளனர்.

கனடா நாட்டின் வான்கூவர் (Vancouver) நகரில் இருந்து வெளிவரும் ராபில் (Rabble) பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் டெரிக் ஓ’கீஃபெ (Derrick O’Keefe) ஒரு செவ்வாய்க் கிழமை டுவிட்டரில் (Tuesday Twitter) அமெரிக்க அரசின் இந்த ஆய்வின் முடிவு மனித குலம் நிகரமை (சோஷலிச) சமூகத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது முழுமையான அழிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் அறைகூவல் விடுப்பதாகத் தெரிவித்து உள்ளார். இதைப் பார்த்த, தான் யார் என்பதைத் தெரிவிக்காத, ஒருவர் (அவ்வாறு மக்கள் நிகரமைச் சமூகம் அமைக்கப் போரிட முயலலாம் என்றும் – மொ.ர்.) ஆகவே (அவர்களை ஒடுக்க மொ.ர்.) ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

மனித நாகரிகத்தை ஒன்றுக்கொன்று மாற்றிக் கொள்ளக் கூடிய, மேட்டுக் குடியினர், பொது மக்கள், இயற்கை வளங்கள்,மனித உழைப்பில் உருவான செல்வங்கள் ஆகிய நான்கு காரணிகளாகப் பிரித்துக் கொண்டு இந்த ஆய்வு தொடங்கப்படுகிறது. ஏனெனில் இயற்கைச் சூழலின் அழுத்தம் மக்களிடையயே உள்ள பொருளாதாரப் படிநிலைகள் ஆகிய இரண்டு கூறுகள் தான் மனித சமூகத்தை அழிக்கும் கொள்ளை நோயாக உறுதியாகவும் தொடர்ந்தும் செயல்படுகின்றன.

ஒவ்வொரு காரணியும் சிக்கலான கணிதச் சமன்பாட்டில் பிரயோகிக்கப்பட்டு, ஹேண்டி (HANDY – Human And Nature DYnamic) என்று ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படும் சூத்திரத்தின் மூலம் விடைகள் சேகரிக்கப்பட்டன. அதன் பின் சமமில்லாத சமூகம் உட்பட பலவிதமான சமூகங்களின் விதிகளைக் கணக்கிட இச்சூத்திரம் வடிவமைக்கப்பட்டது.

பணக்காரர்களும் ஏழைகளும் உள்ள அமைப்பு, இன்றைய உலகின் சமூக அமைப்பை மிகவும் சரியாகப் பிரதிபலிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டனர் . முதலில் மேட்டுக் குடிமக்கள் 750 ஆண்டுகளுக்குப் பிறகு உழைக்கும் மக்களுக்குப் பஞ்சம் ஏற்படுத்தி ஆயிரம் ஆண்டுகளில் மனித நாகரித்திற்குச் சாவு மணி அடிக்கும்படியாக வேரூன்றி நின்றனர். இரண்டாவதாக, 350 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டுக் குடியினரும் பொது மக்களுமாகச் சேர்ந்து ஈடு கட்ட முடியாத அளவிற்குப் புவியின் வளங்களைப் பிழிந்து வருகின்றனர். இச்செயல் மனித இனத்தையும், இப்புவிக் கோளையும் இன்னும் 500 ஆண்டுகளில் முழுமையாக அழித்துவிடும்.

இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே சூழ்நிலைக் கேட்டினால் விளையும் பாதகமான விளைவுகளால், பொது மக்கள் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் வரையிலும், மேட்டுக் குடியினர் தங்கள் செல்வ நிலையின் பின் புலத்தால் பாதிக்ப்படாமலேயே தப்பி விடுவார்கள் என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

சமூகத்தின் பிற பகுதி மக்களை மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாத மேட்டுக் குடியினரால் (மெக்சிகோ நாட்டு) மாயன் நாகரிகமும், ரோமன் நாகரிகமும் அழிந்து போனது போல, இப்பொழுது உள்ள மேட்டுக் குடியினரும், தங்களுக்குச் செல்வச் செழிப்பு நிலை அளிக்கும் பாதுகாப்பின் காரணமாகத் தங்கள் வழக்கமான வழியிலேயே செல்வார்கள் என்று உறுதியாகக் கூற முடியும்.

இந்த நிலை மாறி மனிதர்கள் அனைவரும் அழியாமல் இருப்பதற்கு, இரண்டே வழிகள் தான் உள்ளன. ஒன்று பிறப்பு விகிதம் மிகப் பெரும் அளவு குறைக்கப்பட வேண்டும்; அல்லது இயற்கை வளங்களும் அற்றின் விளைபொருட்களும் நியாயமான முறையில் அனைவருக்கும் சமமான அளவில் விநியோகிக்கப்பட வேண்டும். வரவிருக்கும் அழிவுகளைத் தடுப்பதற்கு இவ் யோசனைகளை ஏற்பது தான் வழி என்று இவ் ஆய்வு கூறுகிறது.

பத்தொன்பதாம் நுற்றாண்டில் ஆங்கிலேய அறிஞர் தாமஸ் மால்துஸ், (புலனடக்கம் மூலமாக) பிறப்பு விகிதத்தைப் பெருவாரியாகக் குறைத்தால் அன்றி, மனிதர்களிடையே கொன்று தின்னும் அளவிற்குப் பஞ்சமும் அழிவும் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்று கூறினார். அதே போன்ற அச்சமூட்டக் கூடிய நிலைமை தான் இன்றும் இருக்கிறது. இருநூறு அண்டுகளில் விவசாயத்தில் ஏற்பட்டு உள்ள தொழில் நுட்ப வளர்ச்சிகள் மால்தூஸின் வரும் பொருள் உரைத்தலைத் தவறாக்கி உள்ளது.

ஆனால், இப்பொழுது தொழில் நுட்ப வளர்ச்சிகள் நிலைமைகளைச் சீர்திருத்த முடியாது என்று, ரோம் சாம்ராஜ்யத்தின் அழிவை ஆதாரமாகக் காட்டி, முதிர்ச்சியான, சாமர்த்தியமான, சிக்கலான, படைப்பாற்றல் கொண்ட நாகரிகம் அழியும் தன்மை கொண்டதாகவும், நிரந்தரமற்றதாகவுமே இருக்கும் என்று ஸஃபா மொடிஷரியின் ஆய்வு கூறுகிறது. நாம் அறிந்த (சமத்துவத்தை அடிப்படையாகக் கொள்ளாத) மாயா, ரோமன், சீன வம்ச, சுமேரிய நாகரிகங்கள் அழிந்தே உள்ளன.

“யாருமே எல்லாமே சரியான முறையில் தேர்வு செய்து போய்க் கொண்டு இருக்கவில்லை; மாற்றத்திற்கான விசை நாகரிக சமூகத்தின் உள்ளேயே இருக்கிறது” என்று பெல்ஜியத்தில் உள்ள கனடிய பத்திரிக்கையாளர் டெபோரா மக்கன்ஜி (Debora Mackenzie) மின்னஞ்சல் மூலம் புதிய அறிவியலாளர்களுக்கு, சமூகத்தின் பேரழிவு பற்றி நேஷனல் போஸ்ட் (National Post) பத்திரிக்கையில் எழுதி உள்ளார்.

இவ் ஆய்வு கூறும் மனித நாகரிகத்தின் முழுமையான அழிவு என்ற கருத்தைப் பற்றித் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், அதில் அக்கறை கொள்ளவில்லை என்றும் விக்டேரியா பல்கலைக் கழகத்தின் கிரேக்க, ரோமன் ஆய்வுத் துறையின் தலைவர், தொல்லியல் ஆராய்ச்சியாளர் பிரெண்டன் புர்க் (Brendan Burke) நேஷனல் போஸ்ட் பத்திரிக்கைக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ‘இருண்ட காலம் என்று வரலாற்றில் கூறப்படும் ஒரு பேரழிவுக்குப் பின் வரும் காலமானது மிகவும் குறைவாக அறியப்பட்ட / ஆராயப்பட்ட காலமாகும்’ என்று எழுதி உள்ளார்.

 

நன்றி : இராமியா | கீற்று இணையம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *