கலர் செய்த முடியை பராமரிப்பது எப்படி..


புதிய தோற்றம் பெறவும் நரை முடிகளை மறைத்து உங்களது தோற்றப் பொலிவை மேம்படுத்தவும் தலைமுடியை கலர் செய்கிறோம்.

நாணயத்துக்கு மற்றொரு புறம் இருப்பது போல தலைமுடியை அடிக்கடி டை செய்வதனால் சில பின் விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே நாள்பட்ட அழகு பராமரிப்புக்கு ஏற்ற வழிமுறைகளை நமது அழகு பராமரிப்பு நடைமுறைகளில் உட்படுத்த வேண்டும்.

கூந்தலை டை செய்வது தவறானதா?

நிபுணர்களின் கருத்து வேறாக உள்ளது. புதிய தொழில் நுட்பங்கள் ஹேர் டை மேல் கொண்டிருந்த தவறான எண்ணத்தை சற்றே மாற்றுகிறது. உண்மை தான், அமோனியா மற்றும் ஹைடோஜன் பெராக்சைடு ஆகியவை மிகவும் குறைவான அளவு கொண்ட ஹேர் கலர் பிராடக்டுகள் தற்போது மார்க்கெட்டில் கிடைக்கின்றன. ஆனால் ஹேர் டைகளில் கெமிக்கல்கள் உள்ளது என்பது உண்மைதான்.

அதிக காலம் கெமிக்கல்களை பயன்படுத்துவது சரியான விஷயமல்ல. ஹேர் டையை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் அதனை உடனடியாக நிறுத்துவதும் கடினம். மேலும், மேக்கப்பை நாளின் இறுதியில் கிளென்சர் மூலம் நீக்குவது போல இதனை நீக்கவும் முடியாது. ஹேர் டை உங்களது கூந்தலில் அதிக காலம் தங்கிவிடுகிறது. இதனால் தலைமுடிக்கு பாதிப்பு ஏற்படலாம்.

டையில் உள்ள கெமிக்கல்கள் நேரடியாக மயிற்கால்களில் பட்டு உடனடியாக அதனை திறக்க செய்து கலரை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. அடிக்கடி டை செய்வதால் முடி சொரசொரப்பாகி வறண்டுவிடும். கலர் செய்த கூந்தல் பாதிப்புக்கு எளிதில் உட்பட்டுவிடும். கெமிக்கல் பிராசஸ் முடியின் நெகிழ்வுத்தன்மையை குறைத்து எளிதில் உடைய செய்துவிடும்.

கலர் செய்தாலும் எனது தலைமுடி செழிப்புடன் காண நான் என்ன செய்ய வேண்டும்?
கலர் செய்த முடியை பாதிப்பிலிருந்து பாதுகாக்க சிறந்த வழி அது போதிய நீர்சத்தினையும் போஷாக்கினையும் தனக்குள் தக்க வைத்துக் கொள்ள செய்வதாகும்.

  1. டீப் கண்டீஷனரை பயன்படுத்தி நீர்சத்தினை தக்க வைக்கவும். கேயோலின் கிளே மற்றும் ஷியா பட்டர் ஆகியவற்றை பயன்படுத்தி தலை முடிக்கு புரத சத்தினை கொடுக்கவும். இதில் உள்ள புரதம் தலை முடிக்கு உறுதியளித்து உடையாமல் தடுக்கும்.
  2. போஷாக்களிக்கும் மூலிகைகளை பயன்படுத்துங்கள். ஜின்செங் அப்படிப்பட்ட ஒரு மூலிகையாகும். இது இரத்த ஓட்டத்தை தூண்டி, தலைமுடிக்கு இரத்தம் மற்றும் ஊட்டச்சத்தினை தருகிறது, இதனால் முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது. வேப்பிலை, ஆயுர்வேதத்தால் நம்பப்படும் மற்றொரு மூலிகையாகும். அது தலைமுடியை சுத்தம் செய்து கெமிக்கல் டிரீட்மெண்ட் செய்த கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது. வேப்பிலையை ஆயில் மசாஜுகளுக்கும் பயன்படுத்தலாம் மற்றும் ஹெர்பல் ஷாம்பூக்களில் ஒரு முக்கிய ஆக்டிவ் உட்பொருளாகவும் பயன்படுத்தலாம்.
  3. ஸ்டைல் செய்யுங்கள் ஆனால் கவனமுடன். ஹேர் ஸ்ட்ரெயிட்னர்கள் மற்றும் புளோ டிரையர்களை பயன்படுத்துவதை குறைக்கலாம். அப்படியே பயன்படுத்தினாலும் உஷ்ண பாதுகாப்பான்களை பாதுகாப்புக்காக உபயோகிக்கவும். அதற்கு கற்றாழை மற்றும் சூரிய காந்தி விதை எக்ஸ்ட்ராக்ட் கொண்டவை மிகவும் சிறந்தவை.
  4. ஹேர் மாஸ்குகளை அடிக்கடி பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளைக் கரு, தயிர் மற்றும் அவகாடோ ஆகியவை தலைமுயை ரிப்பேர் செய்வதற்கான சிறந்த தீர்வுகளாகும். இவை கூந்தலுக்கு மேலும் பளபளப்பினையும் தரக்கூடியவை.
  5. இதர பொருட்களுடன் பாரபின் அல்லது டைகள் அல்லாத பொருட்களை பயன்படுத்தவும்ஆக்டிவ் பொருட்களான அமோனியா மற்றும் பெராக்சைடு கொண்ட இந்த பொருட்கள் தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு நாள்பட தீங்கு விளைவிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
  6. குளிர்ந்த நீரில் கூந்தலை அலசுவது விட்டமின் மற்றும் புரதம் அதிகமுள்ள உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்வது அடிக்கடி தலைமுடியை டிரிம் செய்து கொள்வது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

நினைவில் கொள்ளுங்கள், இயற்கையான பொருட்கள் சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தலை முடியை கலர் செய்தே ஆக வேண்டும் எனில் புத்திசாலித்தனமாக சிந்தித்து அதனை செய்து உங்களது கூந்தல் காண்பதற்கு அழகாக இருப்பது மட்டுமன்றி தொட்டு உணரவும் மிருதுவாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்!

 

நன்றி : m.dailyhunt.in

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *