ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீஃபுக்கு 7 ஆண்டு சிறை


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு ஊழலுக்கு ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமது வருவாய் மற்றும் சொத்துக்களுக்கு அதிகமாக முதலீடுகளை மேற்கொண்டமை தொடர்பில் அவருக்கு எதிராக ஊழல் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த வழக்கில் தமது வருவாய் தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதை தொடர்ந்து அவருக்கு 7 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் நவாஷ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து அந்நாட்டு உயர் நீதிமன்றத்தினால் பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு கடந்த ஜூலை மாதத்தில் ஏற்கனவே 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் மீது மூன்று ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுடன், அவற்றில் ஒரு குற்றச்சாட்டுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட குறித்த தீர்ப்பின் பிரகாரம், நவாஷ் ஷெரீப்பிற்கு 10 வருட சிறைத்தண்டனையும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *