இந்தியா vs நியூசிலாந்து போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு


இப்போது இந்த நேரத்தில், இந்த போட்டியை சீர்குலைக்க முடியும் என்றால், அது மழையால் மட்டுமே முடியும். ஆம், இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் போட்டியில் 50 சதவீதம் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இன்று மழை காரணமாக போட்டி நடைபெற வில்லை என்றால், நாளை (புதன்கிழமை) நடைபெறும். ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளையும் காரணமாக போட்டி நடைபெற வில்லை என்றால், என்ன நடக்கும்?

இதுவரை, இந்தியா 8 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மறுபுறம், நியூசிலாந்து 11 புள்ளிகளை பெற்றுள்ளது.

மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. நியூசிலாந்து மட்டும் வெளியேற வேண்டிய சூழல் நேரிடும். மழை காரணமாக போட்டி நிறுத்தப்படும் என்றால், பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா எளிதாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

நன்றி-Sivamohan



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *