சிறுநீர் கழிக்க வீட்டின் வெளியே வந்தவர் காட்டு யானை தாக்கி மரணம் – நீலகிரி  


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள கூட்டாடா எஸ்டேட்டில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் சாமிதாஸ் ( 63 ).
கடந்த 26ம் திகதி அதிகாலை சிறுநீர் கழிக்க வேண்டி வீட்டின் வெளியே வந்த போது அங்கிருந்த காட்டு யானை இவரை திடீரென தாக்கியுள்ளது.
படுகாயமடைந்த இவரை கோத்தகிரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வனதுறை அதிகாரிகள் சாமிதாஸின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.50 ஆயிரம் நிவாரண உதவியும் வழங்கினார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *