ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் இலவச நீட் தேர்வு பயிற்சி.


ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் இலவச நீட் தேர்வு பயிற்சி.

தகுதி இருந்தும் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி எடுக்க வசதியற்ற மாணவர்களுக்காக இலவச நீட் பயிற்சியினை வழங்க உள்ளது.
நீட் பயிற்சி வகுப்புக்கு கட்டணமாக ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டியுள்ளது.

இது எல்லோராலும் இயல்வதல்ல. இதனால் திறமையான பல மாணவர்களால் நீட் தேர்வுக்கு தேவையான பயிற்சியினை எடுக்க முடியாமல் போய்விடும் சூழல் உருவாகிவிடுகிறது. அவர்களுக்காகவே வைத்ய வித்யா என்ற பெயரில் நீட் தேர்வுக்கான பயிற்சியினை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

ஐஐடி ஸ்டடி சர்க்கிளின் நீட் பிரிவு இந்தப் பயிற்சியினை கொடுக்கவுள்ளது.

மருத்துவராகும் லட்சியத்தில் இருக்கும் மாணவர்கள் இந்தப் பயிற்சி பெற முடியும். பயிற்சியினைப் பெற நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பங்குபெற வேண்டும்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வரும் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் படிக்கும் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். நுழைவுத் தேர்வில் பங்கு பெற மாணவர்கள் www.krishnasweets.net இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 1 வரை நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பிக்க முடியும். நுழைவுத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் இலவசப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நுழைவுத் தேர்வு ஜூன் 2-ஆம் தேதி ஆர்.எஸ்.புரம், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது.

இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் ஜூன் 2- ஆம் தேதி காலை தேர்வு நடைபெறும் இடத்தில் 9 மணிக்கு இருக்க வேண்டும். பயிற்சி வகுப்புகள் ஜூன் 16 முதல் துவங்கும் என்பதை அறியத்தருகின்றனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *